Thursday, August 7, 2014

என் சோகம் என்னோடு

என் சோகம் என்னோடு




இன்பத்தில் ஆரம்பம்
துன்பத்தில் முடிவு
வாழ்கையின் வடிவம்…. ……
வாடும் மலருக்கும்
வாழ்க்கை உண்டு ………..!!!!!!!!!!!!!
வாசமில்லா பூவிற்கும்
ஒரு நாள் வாழ்க்கை உண்டு
ஆடும் மயிலுக்கும்
வாழ்க்கை உண்டு
பாடும் பறவைக்கும்
சில நாள் வாழ்க்கை உண்டு,

பாச கயிற்றால் பின்னபட்ட
பாவிகள் நாங்கள்……….!!!!!!!!!!!!!!!
பறந்த மனத்தை சிதறவிட்ட
அப்பாவிகள் நாங்கள்……!!!!!!!!!!!!!
உலகை எண்ணி
உறங்காதவர்கள் நாங்கள்…..!!!!!!!
உண்மையை நினைத்து
உள்ளத்தை மறந்தவர்கள் நாங்கள்…..!!!!
இசையை தெரிந்தும் இராகத்தை
தேடும் கலைஞர்க்ள் நாங்கள்……!!!!!!!!!!!!!!!

……. இயற்கையே …………………..
உன் மடியில் தலை சாய்க்கவே
நினைக்கிறேன்………!!!!!!!!!!!!!!
ஆனால்!!! உள்ளத்தில் மட்டும்
ஏதோ---- ஒரு போராட்டம்
இது உணர்ச்சி போராட்டம்
என்றும் உண்மை போராட்டம்

என் மனதில் எழுந்ததை
மணிமண்டபத்தில் வைக்கவே நினைத்தேன்
ஆனால்…………………….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என் இதயத்தில் புதைகுழி இருப்பதை
பின்னரே உணர்ந்தேன்…………..!!!!!!!!!!!!!!!!!!

பிரிந்த உயிர் திரும்புமா
இல்லை?????
உதிர்ந்த இலைதான் மீண்டும்
ஒட்டுமா????
வரும் உயிர் ஒன்று இருந்தால்
போன உயிர் பற்றி கவலையில்லை
தெரு வழி சென்றது ………..!!!!!!!!!!!!!
என் வழி திரும்புமா,
இல்லை………..!!!!!!!!!!!!!
தன் வழி செல்லுமா????
என் இரு விழிகள் இல்லையென்றால்
உன் கரு விழியில் கலந்திருப்பேனா
இல்லை….!!!
என் கண்கள் தான் கலங்கி இருக்குமா??

எதற்காக வாழ்கிறேன் என்பதை மறந்தேன்…..
இன்று……!!!!!!!!!!!!!
உனக்காக வாழ்கிறேன் என்பதையல்லவா
நினைக்கிறேன்……!!!!!!!!!!!
என் பாதை செல்லுமிடமெல்லாம்
பேதை நீ வருவாய் என்றல்லவா
நினைத்தேன்………
அதற்க்காக தானே உன்னை அழைத்தேன்
இன்று உனக்காக அல்லவா நான்
அழுதேன்…………..!!!!!!!!!!

இன்றைய தடை என்றும் நமக்கு
தடை தான்…….!!!!!!!!!!!
இன்றைய உலகம் வாழும் வரை
நாளைய உலகம் இருக்கும் வரை
இருந்தாலும்…………….!!!!!!!!!!!!!!!
தடையாக இருக்கும் இடத்தில்தானே
தாடகமும் அழகுபெறுகிறது
தாமரையால்……..
தடையாக இருக்கும் முள் மீது தானே
ரோஜாவும் மலர்கிறது…..!!!!!!!!!!!!
தடையாக இருக்கும்
மலையின் மீது தானே கங்கையும்
மங்கையாகிறது………….!!!!!!!!!!!
எண்ணி பார்த்தால்
உலகத்தில் எல்லாமே தடைதான்
உணர்ந்து பார்த்தால்
எல்லாமே நமக்கு விடைதான்

அச்சமின்றி வந்தால்
அழைத்து கொள்வேன்
ஆசையுடன் வந்தால்
அணைத்து கொள்வேன்

நீந்த தெரிந்த உனக்கு
கரையில் காவல் என்பது எதற்கு
ஆற்றுடன் வந்தாலும்
என் கரையை தானே நீ அடைவாய்

நேசித்த பின்பு யோசிப்பவன்
கலைஞன்,
யோசித்த பின்பு நேசிப்பவன்
என்றுமே அறிஞன்,,,,,,,,,,,,,,,,
நான் கலைஞனும் இல்லை,
அன்று உன்னை நேசித்ததால்,
அறிஞனும் இல்லை நாளைய,
வாழ்வை உன்னிடம் யாசிப்பதால்
இன்றைய பொழுது மறையும் வரை
நாளைய பொழுது விடியும் வரை

நினைவில் கொள் ,,,,,,,,,,,,,,,,,,,
நித்தம் ஒரு சோதனை
நினைத்தாலே இன்ப வேதனை
என் நிழல்கள் மறையும் முன்னே
உன்னிடம் வெளிச்சங்கள் தோன்றும்
இளைப்பாற மனம் தவிக்கும்
தினம்தோறும் என் உடல்
இளைக்கும்………..!!!!!!!!!!!!!

காசில்லாமல் உயர்வு இல்லை
என் கண்கள் இல்லாமல்
கவிதை இல்லை………..!!!!!!!!!!!!!நீ இல்லாமல் என்றுமே
நான் இல்லை………..!!!!!!!!!!!!!

பிரியமுடன்
கமல்